வழங்கிய காணியை மீளப்பெற நடவடிக்கை: ஊனமுற்ற இராணுவ வீரரின் குடும்பம் நடுத்தெருவில்

Prathees
2 years ago
வழங்கிய காணியை மீளப்பெற நடவடிக்கை:  ஊனமுற்ற இராணுவ வீரரின் குடும்பம் நடுத்தெருவில்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் ஊனமுற்ற இராணுவ வீரரின் குடும்பத்திற்கு குடும்பத்திற்குச் சொந்தமான .10 பேர்ச் காணியை  வலைப்பந்தாட்ட மைதானத்தை விரிவுபடுத்துவதற்காக  கையகப்படுத்தும் நடவடிக்கையில் பாதுக்க அபிவிருத்திக் குழு ஈடுபட்டுள்ளதாகவும் இதனர்ல்  தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்தஇராணுவ வீரரின் மனைவி  ஹாஷி நிலாந்தி தெரிவித்தார்.

2018ம் ஆண்டு 65 குடும்பங்களுக்கு பாதுக்க தம்பர பிரதேசத்தில் குறித்த  காணி  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு சிறு குழந்தை  உள்ளதாகவும், தங்குமிடம் இல்லாததால் தனது ஊனமுற்ற கணவர் மற்றும் குழந்தையுடன் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருவதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு காணி இல்லாத குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்காக   வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேர்காணல் நடத்தப்பட்டது.

அதில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தகுதி அடிப்படையில் இக்காணிகள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்காக எந்தக் குடும்பத்திற்கும் எழுத்துப்பூர்வமாக எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் மேலும், வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு கிராமம் திறக்கும் நாளில் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டதாக  பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். 

குறித்த காணியில் பொது வசதிகளுக்காக 19.5 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் தற்போது கைப்பந்து விளையாடி வருவதாகவும்  அவர் கூறினார்.

தற்போது, ​​அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்றின் கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட கைப்பந்து மைதானத்தை விரிவுபடுத்த  நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் 

தானும் கணவரும் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் பாதி கட்டின வீடு மற்றும்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல் பாரிய அநீதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பாதுக்க அபிவிருத்திக் குழுவின் செயலாளர் nதிவக்கையில், 

கைப்பந்து மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக அருகிலுள்ள ஒரு நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் இருந்தது. அதற்கமைவாக, அபிவிருத்திக் குழு, சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியது

கடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு வாய்மொழியாக அறிவிக்கப்பட்டது.

ஒரு காணியை வேறொரு இடத்திலிருந்து பொருத்தமான முறையில் வழங்குவதற்கு அல்லது உரிய காணியை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.  வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!