கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை

#Death #Police
Prathees
4 years ago
கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை


அக்மீமன, தல்கம்பொல, ஜனாதிவத்த பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 7ஆம் திகதி காலை தனது வீட்டிற்கு செல்லும் வழியில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த  சுரேஷ் விஜித குமார (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட அவரது மனைவி அக்மீமன ஹியாரே, திவத்த பிரதேசத்தில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சடலமாக மீட்கப்பட்டவர்  தம்பல ஜனாதிவத்த பிரதேசத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஜனாதிவத்த பிரதேசத்தில் உள்ள காணி உரிமையாளர் ஒருவர், தாம் தாக்கப்பட்டதாக அக்மீமன பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்துஇ அக்மீமன பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதிகாரிகள் வருவதை பார்த்த மூன்று குழந்தைகளின் தந்தை  தப்பி ஓடிவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட நபர்  இரவு 11.00 மணியளவில் அவர் தனது வீட்டிலிருந்து கடையொன்றுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 7ஆம் திகதி காலை வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4