அதிரடியாக உயர்ந்த முட்டையின் விலை

#prices
Prathees
4 years ago
அதிரடியாக உயர்ந்த முட்டையின் விலை

உள்ளூர் சந்தையில் தற்போது முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 25 ஆக இருந்த முட்டை விலை தற்போது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதே இதற்கு காரணம் என  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சியின் விலை 840 ரூபாய் வரை உயர்ந்தாலும் இன்று சற்று குறைந்து ரூ.650 ஆக உள்ளது.

டாலர் நெருக்கடியின் காரணமாக பால் மா இறக்குமதி மீண்டும் சிக்கலாக மாறியுள்ளதுடன் சந்தையில் பால் மா விற்பனைக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4