காரில் கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபர்: பணம் மற்றும் நகைகளை கொள்ளை

#Police
Prathees
4 years ago
காரில் கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபர்:  பணம் மற்றும் நகைகளை கொள்ளை

பம்பலப்பிட்டி லோரன்ஸ் மாவத்தையில் ஒரு விழா மண்டபத்திற்கு அருகில் உள்ள  வாகனம் நிறுத்துமிடத்தில் இன்று காரில் வந்த நபர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைவிலங்கிட்டு அதே காரில் கடத்திச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் காரில் இருந்த நபரிடம்  500,000 ரூபாய்க்கு மேல் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 
30,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்

திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ளார். 

தனது மனைவியை  மண்டப வாயிலில் இறக்கி விட்டு,  வாகன தரிப்பிடத்திற்கு காரை நிறுத்தி வைக்கச் சென்றுள்ளார்.

அப்போது, வெள்ளை பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் ஒருவர், அவரை அணுகி  பொலிஸ் அதிகாரி எனக் கூறியுள்ளார்.

அதன்பின்னர், காரில் வந்தவரை  கைவிலங்கிடப்பட்டு காரின் பின் இருக்கையில் அமரவைத்துவிட்டு  காருடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4