அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்! - அரசிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

Prasu
2 years ago
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்! - அரசிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் உரையாற்றிய அவர் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரிடம் அவர் விடுத்த கோரிக்கை வருமாறு:-

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 1994இல் கைதுசெய்யப்பட்டவர்கள்கூட இன்னும் சிறையில் உள்ளனர். வழக்கு முடிவதற்கு சிரமமாக உள்ளது. விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் அரச தரப்பில் வழங்கப்பட்டது. ஆனாலும், வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை. சாட்சியங்கள் இல்லை. குற்ற ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது.

எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அல்லது புனர்வாழ்வின் பின்னராவது விடுவிப்பதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" - என்றார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!