வெடித்து சிதறிய திரவ உர கேன்கள்: அச்சத்தில் விவசாயிகள்

Prathees
4 years ago
வெடித்து சிதறிய திரவ உர கேன்கள்: அச்சத்தில் விவசாயிகள்

அநுராதபுரம், பதவிய பிரதேசத்தில் கமநல சேவை நிலையம் ஒன்றினால் வழங்கப்பட்ட திரவ உரக் கேன் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், பதவி பராக்கிரமபுர பிரதேசத்தின் கமநல சேவைகள் நிலையம் அண்மையில் அப்பகுதியிலுள்ள விவசாய அமைப்புகளுக்கு திரவ உரம் கையிருப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

உரக் கேன்கள் அதிக அழுத்தத்தில் வெடித்துச் சிதறியது.

திரவ உரம் எனப்படும் நானோ நைட்ரஜன் மிகவும் துர்நாற்றம் வீசும் மற்றொரு வகை உரம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாய அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளுர் நிறுவனம் ஒன்றினால் இந்த கரிம திரவ உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் சமிந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4