வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று

Prabha Praneetha
4 years ago
வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை  மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை 7 நாட்கள் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்று, 22 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி 2ஆம் வாசிப்பு மேலதிக 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை ஆரம்பமானது.

நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதன்போது பதிலளித்து உரையாற்றவுள்ள நிதி அமைச்சர் பாதீட்டில் திருத்தங்கள் செய்ய இருப்பின் அவை தொடர்பான அறிவிப்புகளை விடுப்பார். அதன்பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4