புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பெரருத்திய அடுப்பும் வெடித்தது!

#Litro Gas
Prathees
4 years ago
புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பெரருத்திய அடுப்பும் வெடித்தது!

சிவப்பு முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்ட அடுப்பு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உடுநுவர எல்பிட்டிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டர் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காஸ் சிலிண்டரை வாங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் சிவப்பு முத்திரையுடன் சிலிண்டர் சந்தைக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பல பாகங்களில் இருந்து இன்றும் எரிவாயு வெடிப்பு மற்றும் விபத்துக்கள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியதையடுத்து,  பாவனையாளர் அதிகார சபையின் வழிகாட்டுதல்களுக்கு அமையவே எரிவாயு நிறுவனங்கள் சிவப்பு முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டரை சந்தைக்கு வெளிட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4