இலங்கையில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பானில் வேலை!

#SriLanka
இலங்கையில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பானில் வேலை!

இலங்ககையின் திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு ஜப்பானில் வேலைக்கு அழைத்துவர தாம் தயராக இருப்பதாக, இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட மிசுகோஷி ஹெடாகி (Mizukoshi Hideaki) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே Mizukoshi மிசுகோஷி ஹெடாகி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக இலங்கையும் ஜப்பானும் குறைந்த திறன் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) செய்து கொண்டன.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸின் கூற்றுப்படி, குறிப்பிட்ட திறன்மிக்க மனிதவள ஆட்சேர்ப்பு திட்டத்தின் (SSWRP) கீழ் 14 துறைகளில் இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் வேலை வாய்ப்புகளைப் போலவே ஜப்பானிய மொழியையும் கற்றுக்கொள்வதில் நமது இளைஞர் சமூகத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதை பிரதமர் இதன்போது ஜப்பானிய தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.
தனது பதவிக்காலத்தில் நாட்டில் முதலீட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாக மிசுகோஷி ஹெடாகி கூறினார்.

இலங்கையில் தற்போது சுமார் 75 ஜப்பானிய முதலீட்டு திட்டங்கள் செயற்படுகின்றன. ஜப்பான் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 382 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்து 12,000 க்கும் மேற்பட்ட தொழில்களை உருவாக்கியுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய புதிய ஓடு பாதையும், கல்யாணி பொன் நுழைவாயில் மற்றும் கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டம்  தொடர்பாகவும் இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் கலந்து
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!