பாடசாலைகளில் கொரோனா கொத்தணிகள்: மறுக்கும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர்

#School #Corona Virus
Mayoorikka
4 years ago
 பாடசாலைகளில் கொரோனா கொத்தணிகள்: மறுக்கும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர்

பாடசாலைகளில் கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லையென சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் நான்கு மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீட்டுச் சூழலிலிருந்து ஏராளமான மக்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதில்லை. 

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். 

இதற்கிடையில், பாடசாலைகளில் கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லையென்று ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும், பாடசாலைகளில் கொத்தணிகள் உருவாகலாம் என்றும், மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4