வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

#Parliament
Mayoorikka
4 years ago
வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று காலை 9.30 முதல் மாலை 05 மணி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று மாலை 05 மணிக்கு வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நிதியமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சுக்கள், அதனோடு தொடர்புடைய இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் ஆகியவற்றின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. 

விவாதங்களின் முடிவில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளித்து உரையாற்றவுள்ளார். அதனையடுத்து வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு சபையில் நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4