யாழ். மாங்காய் பிரியாணி சமைக்கும் முறை.

#Cooking
யாழ். மாங்காய் பிரியாணி சமைக்கும் முறை.

தேவையானவை:

  •  பாசுமதி அரிசி - 2 கப்,
  • முற்றிய கிளிமூக்கு மாங்காய் - ஒன்று,
  • வறுத்த வேர்க் கடலை - 3 டேபிள் ஸ்பூன்,
  • பச்சை மிளகாய் - 2, 
  • காய்ந்த மிளகாய் - ஒன்று,
  • கொத்த மல்லித் தழை - 6 டேபிள் ஸ்பூன்,
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், 
  • உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

  1. பாசுமதி அரிசி யுடன் உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும்.
  2. மாங்காயை நன்றாகக் கழுவி, கொட்டையை நீக்கி தோலுடன் சிறிய சிறிய துண்டுக ளாக நறுக்கவும்.
  3. பச்சை மிளகாயை நறுக்கி மாங்காயுடன் சேர்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, மல்லித் தழையை சேர்த்து
  4. மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (நீர் விட வேண்டாம்... நைஸாகவும் அரைக்கக் கூடாது).
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், வறுத்த வேர்க்கடலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  6. இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!