வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை திடீர் உயர்வு!

#Corona Virus
Mayoorikka
2 years ago
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை திடீர் உயர்வு!

கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் ஒருங்கிணைந்த கொவிட் தொற்றாளர்
வீட்டு பராமரிப்பு திட்டத்தின்தலைவர் விசேட மருத்துவ நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறிகளைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகளை வீடுகளை வைத்துப் பராமரிக்கும் செயற்றிட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 3 வாரங்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 4,295 கோவிட் நோயாளிகள் வீடுகளில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் தொற்று நோயாளர் தொகை நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் போன்ற அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய தன் அவசியத்தையும் விசேட மருத்துவ நிபுணர் மல்காந்தி கல்ஹேன வலியுறுத்தினார்.

அத்துடன் கோவிட்தொற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெற கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

வேகமாகப் பரவக் கூடியதும் உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரியது எனவும் வகைப்படுத்தப்பட்ட ஒமைக்ரோன் புதிய திரிபு உலகெங்கும் பரவி வருகிறது. இலங்கையிலும் ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கடந்த 03 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் ஒமைக்ரோன் திரிபு குறித்த அறிவியல் ரீதியில்உறுதிப்படுத்தப்பட்ட முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகாதபோதும் மக்கள் பூஸ்டர் உட்பட தங்களுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாது பெற்றுக்கொள்வது அவசியம் என இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் போதிய இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இருப்பதால் வயது உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு அறிகுறியற்ற கோவிட்-19 நோயாளிகளையும் கூட வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித தடையும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!