புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த பெற்றோர்

#School #Court Order
Prathees
2 years ago
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த பெற்றோர்

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய வெட்டுப்புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுக்க கல்வி அமைச்சுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க  ஜனவரி 19ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட  இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை ஜனவரி 19-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்கள் சார்பாக அவர்களின் பெற்றோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகள் அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ள போதிலும், தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுக்களில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளை வழங்கும் முறையான முறைமையை உருவாக்க கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!