சிறுவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

#Gotabaya Rajapaksa #Covid Vaccine #Covid 19 #Colombo
Mayoorikka
4 years ago
சிறுவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

சிறுவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க  அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

அதன்படி 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசியினையும் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

 கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டமிட்டு தடுப்பூசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் நோயை கட்டுப்படுத்தும் விசேட குழுவுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் விமான நிறுவனங்களால் விமான பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது கூட்டத்தில் தெரியவந்ததுள்ளது.

இதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4