ஏப்ரல் மாதத்திற்குள் இந்நாட்டு மக்களுக்கு உணவு இல்லாமல்போகும்: பேராசிரியர் எச்சரிக்கை 

#Food
Prathees
2 years ago
ஏப்ரல் மாதத்திற்குள் இந்நாட்டு மக்களுக்கு உணவு இல்லாமல்போகும்: பேராசிரியர் எச்சரிக்கை 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாமல் போகும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹா பருவத்திற்கான பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வேண்டிய போதிலும், தேவையான உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

கரிம திரவ உரங்களை மட்டுமே இடுவதன் மூலம் நாட்டில் போதுமான அறுவடையை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹா பருவம் நாட்டின் மிக முக்கியமான மற்றும் அதிக அறுவடைக் காலம் என்றும், அந்தப் பருவத்தில் பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

விவசாயத் துறையில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது என்றும் பேராசிரியர் மெத்திகா விதானகே மேலும் தெரவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!