இராணுவ ஆட்சியின் கீழ் எந்த நாடும்  அபிவிருத்தியடைய முடியாது:  முன்னாள் இராணுவத் தளபதி

#SriLanka
Prathees
4 years ago
இராணுவ ஆட்சியின் கீழ் எந்த நாடும்  அபிவிருத்தியடைய முடியாது:  முன்னாள் இராணுவத் தளபதி

இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் உலகில் எங்கும் அபிவிருத்தி அடையவில்லை என கைத்தொழில் அமைச்சின் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வீரர்கள் முன்னோடிகளாக இருக்கும் சமூகம் ஒருபோதும் முன்னேறாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் முன்னோடியாக இருப்பவர்கள் படித்த அறிஞர்களாக இருக்க வேண்டும்.

 அதற்கு பதிலாக இராணுவ வீரர்கள் நாட்டின் முன்னோடிகளாக இருந்தால் இதுபோன்ற சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4