வரலாறு காணாத பஞ்சம்: உடல் உறுப்புக்களையும் பெண் குழந்தைகளையும் விற்பனை செய்யும் கொடுமை

#Food #Afghanistan
Mayoorikka
4 years ago
வரலாறு காணாத பஞ்சம்: உடல் உறுப்புக்களையும் பெண் குழந்தைகளையும் விற்பனை செய்யும் கொடுமை

தலிபான்கள் ஆட்சிக்கு பின்னர் வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கன் மக்கள், வாழ்வாதாரத்துக்காக கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளையும், பெண் குழந்தைகளையும் விற்பனை செய்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாலீபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு வெகுடெழுந்த அவர்கள், படிப்படியாக அனைத்து நகரங்களையும் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தனர். 

இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஆட்சி நடத்துவோம் என அறிவித்த அவர்கள், முந்தைய தாலீபான் ஆட்சியில் இருந்ததுபோலவே கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் இருப்பதால், உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

ஒருவேளை உணவுக்கூட வழியில்லாத மக்கள், உணவு மற்றும் பணத்துக்காக தங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். Khaama செய்தி நிறுவனத்தின் தகவல்படி, வீட்டில் உள்ள  பொருட்களை  விற்று, அன்றாட பிழைப்பு நடத்தும் நிலைக்கு பெரும்பாலான ஆப்கானிஸ்தானியர்கள் தள்ளப்படுள்ளதாக தெரிவித்துள்ளது. உட்சபட்சமாக, வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளை விற்பனை செய்து வந்த மக்கள், இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். அதற்காக, ‘கிட்னி விற்பனைக்கு  என விளம்பரம் பதாகைகளை அடித்து தெருக்களில் தொங்கவிட்டுள்ளனர். 

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, பல தசாப்தங்களாக பசி மற்றும் பட்டினி நெருக்கடியில் இருந்து வரும் ஆப்கானிஸ்தானில், இப்போது அவை மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், குளிர்காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. 

சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணிப்பின்படி, இந்த குளிர்காலத்தில் 22.8 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. 8.7 மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் உணவுப் பஞ்சத்தில் சிக்குவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4