நீதி அமைச்சர் பதவியை துறக்க வேண்டும்: சுமந்திரன் சாடல்

#M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
நீதி அமைச்சர் பதவியை துறக்க வேண்டும்: சுமந்திரன் சாடல்

நீதி அமைச்சர்  அமைச்சுப் பதவியை துறந்து வர வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அலி சப்ரி

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. நினைத்தால் பதவியிலிருந்து விலக முடியும். ஆனால் அதனை எவ்வாறு செய்வதென்று அவருக்கு தெரியவில்லை என்றார். 

நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்த, இன்னொரு வழக்கில் சந்தேகநபராக உள்ள ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு நீதி அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றார். சுயமரியாதைய விரும்பும் எந்தவொரு தமிழரும் இந்த ஜனாதிபதி செலயணியில் இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்த சுமந்திரன், அதிகார பரவலாக்கலை வழங்குவதாக ஐ.நாவுக்கும் இந்தியாவுக்கும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் போது வழங்கிய வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டியதோடு, இவ்வாறான நிலையில் ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அநீதியானது எனவும் சாடினார். நீதி அமைச்சர் அலி சப்ரி இது தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசாங்கத்திலிருந்துகொண்டு உங்கள் சமூகத்துக்கு எதிராக செயற்பட முடியாது. எனவே, நீதி அமைச்சுப் பதவியை துறந்து வர வேண்டும் எனவும் சுமந்திரன் எம்.பி இதன்போது கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!