யாழ்.இந்துக் கல்லுாரிக்கு கௌரவம் தேடிக் கொடுத்த ஆசிரியர்.

#SriLanka #Jaffna #Sri Lanka Teachers
யாழ்.இந்துக் கல்லுாரிக்கு கௌரவம் தேடிக் கொடுத்த ஆசிரியர்.

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருது யாழ். இந்துக்கல்லுாரி ஆசிரியர் பெற்றுக்கொண்டுள்ளர். இவ்வாறு பெருமை சேர்த்த ஆசிரியர் திரு.இ.இரமணன் ஆகும்.

விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கற்பித்தலில் புத்தாக்க முறைமைகளைப் புகுத்தி நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான வழிவகைகளைக் கையாண்டு மாணவர்களை கல்வியின் பால் தூணடுவதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்விப் பணியாற்றியமைக்காகவும் உலகின் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக ஆசிரிய பணியினை முன்னெடுத்தமைக்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலுமிருந்து ஒவ்வொரு பிராந்தியங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பத்து வெற்றியளர்களில் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு இ.இரமணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவ்விருதின் பிரகாரம் யாழ் இந்துக் கல்லூரிக்கு 5000 யூரோ பணமும் (ரூ. 1,150,000.00) 1000 அமெரிக்கடொலர் பெறுமதியான பொருள்கள் என்பன கிடைக்கவிருக்கின்றது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4