இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

Reha
4 years ago
இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தென் ஆபிரிக்கா,நமீபியா, பொட்ஸ்வானா, லெசோதோ, சுவாஸிலாந்து மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேற்படி 6 ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4