தவறான தகவல்களை பிரசுரிக்கும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை - சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ஊடங்களை எச்சரிக்கும் ஒரு நபர்!.

Prasu
2 years ago
தவறான தகவல்களை பிரசுரிக்கும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை -  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ஊடங்களை எச்சரிக்கும் ஒரு நபர்!.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுக்கும் , பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட 35 ஆயிரம் கண்களுக்கும் தொடர்பே இல்லையாம்.

ஆம்..

அரச எதிர்ப்பு ஊடகங்களிலும், அரசுக்கு எதிராக இருப்பவர்களுக்கும், அரசை அனாவசியமாக விமர்சித்து தமது ஊடகங்களை நாடாத்தும் உள் நாட்டு, வெளி நாட்டு வியாபாரிகளாக இருப்பவர்ளுதான் தேவையற்ற செய்திகளைப் பரப்பி பணம், புகழ் சம்பாதிக்க முனைகிறார்கள் எனவும், பெயர் குறிப்பிடாத தன்னை இலங்கையின் இறையான்ன்மையை விரும்பும் ஒரு நபரால் ஆதங்கிக்கப்பட்டது.

அவர் மேலும் கூறுகையில், இக்கண் விவகாரத்துக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பு இல்லையாம். பொது நலன் கருதி கண்தானம் செய்பவது என்பது அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஒரு தான உணர்வாக புனிதமாக கருதப்படுகிறது.

அதை கொச்சைப்படுத்தவேண்டாம் எனவும், இதற்க்குள் இன, மத, சாதிகளின் மற்றும் அரசியல்  பிரச்சனைகளை முடிச்சுகப் போடவேண்டாமெனவும், இந்த கண்கள் எப்படி சட்டபூர்வமாக பெறப்பட்டது யார் யாரால் தானம் செய்யப்பட்டது என்பதும் இதற்க்குப் பொறுப்பாக இருந்து அக்காலகட்டங்களில் சேவையாற்றிய வைத்தியர்களுக்கு தெரியும் எனவும்,

திட்டமிட்டு கொலை செய்து கண்களை எடுப்பதற்காக ஒரு உயிரை யாரும் கொல்ல முன்வரமாரமாட்டார்கள் எனவும்,ஆதாரபூர்வமாக ஒரு செய்தியை போடும் அழவிற்கு ஊடகத்தில் செய்திகளை பிரசுரிப்பவர்களுக்கு ஊடக தர்மம், உண்மைத் தன்மை விழங்காது எனவும்,அவர்கள் சரியான செய்திகளை பிரசுரிப்பதை விட வாசகர்களை கவர்ந்து இழுக்கும் தலைப்புக்களை போட்டு வாசகர்களை ஏமாறுகிறார்கள்.

இப்படியான ஊடகங்களை இனம்கண்டு ஒதுக்கி, அரசாங்கம் இவர்களை தடை செய்யவேண்டும்.

தமது ஊடகத்துக்கு சோசல் மீடியாக்களின் ஊடாக விளம்பரப் பணம் பெற‌வே பல ஊடக அறிவில்லாத ஊடகங்க‌ளை நட்டாத்துகிறார்கள்,

இவர்கள் எச்செய்தியை போடுவதானாலும் அதனை நிரூபனம் செய்யகூடியதாக இருக்கவேண்டும்.

அத்தரத்தோடு செய்தியப் பிரசுரிப்பவர்கள் நேரடியாக கேழ்விகளை அரசாங்கத்திடம் சட்டபூர்வமாக கேழ்விகளைக் கேக்கலாம்.

அதர்க்கு அரசாங்கம் தகுந்த பதிலை தரும் எனவும், இப்படியான பொறுப்பற்ற முறையில் செய்திகளை இடுபவர்களுக்கு வருங்காலங்களில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

சிலர் பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என  கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் கேழ்வி எழுப்பியுள்ளனர்.

இன்று எமது கணவன்மார்களையும் உறவுகளையும் தொலைத்து 13 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை.

பெண்களாகிய எங்ளுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கின்றதோ எமது உறவுகள் என்று வருகின்றார்களோ அல்லது நியாயமான தீர்வு கிடைக்கின்றதோ அன்றுதான் எமக்கு சுதந்திரம்.

மேலும் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு எமது என்ன நடந்தது ஐ.நா எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும், கேட்க்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.

எதுஎதுவாகவிருந்தாலும், சட்ட விரோதமாக கண்களையோ அல்லது மனித உறுப்புக்ககளையோ கடத்துவது தண்டிக்ககப்படவேண்டும்.

ஒரு நாடு இன்னொரு உடல் பாகங்களை விற்கும்போதோ அல்லது அன்பளிப்பு செய்யும்போதோ யாரிலிருந்து எடுக்கப்பட்டதோ அவரின் குருதி இனம், அவரது சுகஜீனங்கள் மற்றும் பரம்பரை சுகஜீனம் போன்றவைகளை குறிப்பிட்டு ஓவொருவருக்கும் பிரத்தியேகமாக அறிக்கை கொடுக்கப்படவேண்டும். ஒரு நபரின் அங்கங்களை அல்லது குருதி போன்றவர்றை  இன்னொருவருக்கு பொருத்துவதற்கோ, ஏற்றுவதற்க்கு முன்னர் ஒவ்வொன்றையும் பரிசோதப்பது உலக சட்டம் மற்றும்  முறைமை என்பதும் குறிப்பிட‌டத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!