இன்றைய வேத வசனம் 12.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 12.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.  2 சாமுவேல் 22:18

ஜார்ஜ் உஜ்னோவிச், 2010ல் தன் 94ஆம் வயதில், “இரண்டாம் உலகப்போரின் சிறந்த மீட்புப்பணியாளர்” என்று நியூயார்க் டைம்ஸ் என்னும் பத்திரிக்கையினால் வெண்கல பதக்கத்தைப் பெற்றார்.

செர்பியாவிலிருந்து ஊடுருவியர்களின் மகனாய் பிறந்த இந்த உஜ்னோவிச் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். அமெரிக்காவின் விமானிகளில் சிலர் யுகோஸ்லோவேகியாவிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன், இவர் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பினார்.

விமானிகளை கண்டுபிடிப்பதற்காக காட்டில் பாராசூட்டின் மூலம் பயணம் செய்தார். அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சிறுசிறு குழுக்களாய் பிரித்து, செர்பியர்களைப்போலவே உடை உடுத்தவும் உணவு உண்ணவும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்.

அதற்கு பின்பு மாதக்கணக்கில், ஒவ்வொரு குழுவினரையும் காடுகளில் மரம் வெட்டும் இடத்தில் வரவழைத்து அங்கிருந்த சி-47 விமானத்தின் மூலம் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பச்செய்தார். உஜ்னோவிச் 512 மகிழ்ச்சியான மனிதர்களை மீட்டிருக்கிறார். 

தப்பவே முடியாது என்னும் தருணத்தில் தேவன் தன் சத்துருக்களின் கைக்கு தன்னை நீங்கலாக்கி விடுவித்ததைக் குறித்து தாவீது விவரிக்கிறார். தேவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (2 சாமுவேல் 22:17), என்கிறார். சவுல் ராஜா பொறாமையினால் கோபங்கொண்டு தாவீதை கொலைசெய்ய வகைதேடினான். ஆனால் தேவனுடைய திட்டம் வேறு. “என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்” (வச. 18). 

தேவன் தாவீதை சவுலின் கைக்கு தப்புவித்தார். அவர் இஸ்ரவேலை எகிப்தியர்களின் கைக்கு தப்புவித்தார். கிறிஸ்துவில், தேவன் நம் அனைவரையும் தப்புவித்தார்.

இயேசு நம்மை பாவம், தீமை, மரணம் ஆகியவற்றிலிருந்து தப்புவித்தார். எல்லா பலத்த சத்துருக்களைக் காட்டிலும் தேவன் பெரியவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!