அலட்சியத்தால் பிரிந்த உயிர்

#Accident #Death
Prathees
4 years ago
அலட்சியத்தால் பிரிந்த உயிர்

ஏ9 வீதியில் மதவாச்சி இசின்பஸ்ஸகல பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பயணம் செய்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி, பிரதான சாலையின் குறுக்கே எதிர் திசையில் திரும்ப முயற்சிக்கும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புஹுதிவுல, மதவாச்சியை சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4