ரயில் - மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து: இளம் யுவதி பலி

#Accident #Police
Prathees
4 years ago
ரயில் - மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து: இளம் யுவதி பலி

பயாகல எலகஹவத்த புகையிரத கடவையில் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) பிற்பகல் காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து கொண்ட  சென்ற பெண் விபத்தில்  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் அமைப்பை சீர் செய்யாமையால் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4