குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டில் இருந்து ஞானசார தேரர் விடுதலை

#Gnanasara Thero #Court Order
Prathees
4 years ago
குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டில் இருந்து ஞானசார தேரர் விடுதலை

இஸ்லாம்  மார்க்கம் மற்றும் குரானை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. திரு.ராகலா நேற்று உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் என சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அளித்த வாக்குமூலங்களை பரிசீலித்த பன்னாரதன நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் ஊடாக குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் விசாரணைகளை மேற்கோள்காட்டிஇ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு சட்டமா அதிபரிடம் வழக்குப் பதிவு செய்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4