வடக்கில் எதிர்வரும் திங்கள் முதல் 30, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி.

#SriLanka #Covid Vaccine #Jaffna
வடக்கில் எதிர்வரும் திங்கள் முதல் 30, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி.

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர், சுகாதார துறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக மூன்றாவது தடவையாக (பூஸ்டர்) கோவிட்-19 தடுப்பூசியானது எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இரண்டு தடவைகள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் கோவிட்-19 தொற்றிற்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாத கால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் அல்லது ஏதாவது ஒரு கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு அலகுகளைப் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (பூஸ்டர்) பெற்றுக்கொள்ள முடியும்.

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும்.

அவ்வகையில் மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளில் அல்லது அவர்களால் அறிவிக்கப்படும் நிலையங்களில் எதிர்வரும் 13ஆம் திகதி முதலும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் பிரதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் படி மேற்கூறிய காரணங்களால் தடுப்பூசி தவிர்க்கப்பட்டவர்கள் வைத்திய ஆலோசனையின் படி தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியை இப்போது பெற்றுக்க

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4