கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுகிறார்களா?

#Parliament
Mayoorikka
4 years ago
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுகிறார்களா?

'கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுகிறார்களா? யாழ்ப்பாணக் கடற்கரைகளில் ஒதுங்கும்சடலங்கள் அவர்களுடையனவா?'இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் 6 சடலங்கள் கரையொதுங்கின. இதில்நெடுந்தீவில் கரையொதுங்கிய சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளது. வல்வெட் டித்துறை,பருத்தித்துறை   மீட்கப்பட்ட 3 சடலங்கள் பருத்தித் துறைஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பொலிஸ் பகுதியில்மீட்கப்பட்ட சடலம் எங்கே? அதனை பொலிஸார் சென்று பார்த்துள்ளனர்.
அந்த சடலத்துக்கு என்ன நடந்தது? கரையொதுங்கிய சடலங்களும் காணாமல்போவது மிக ஆபத்தானது.

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவுக்கு எமது அஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறோம். 
 இதேபோன்றகாட்சிகள் இலங்கையிலும் நடந்துள்ளன. தளபதி ரமேஷ், இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் இப்படி கொல்லப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. கர்மவினையே திரும்பி வரும் என சொல்வார்கள்.

பாகிஸ்தானில் நடந்த சம்பவத்துக்கு பிரதமர் இம்ரான் கான் உடனடியாக மன்னிப்பு கோரினார். இலங்கையில் அப்படியான சிங்களத் தலைவர்கள் யாருமில்லை  என்றார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4