நிதியமைச்சும் விரைவில் இராணுவத்தின் கைகளில்! எச்சரிக்கும் எதிர்க்கட்சி தலைவர்

#Sajith Premadasa
Mayoorikka
2 years ago
நிதியமைச்சும் விரைவில் இராணுவத்தின் கைகளில்! எச்சரிக்கும் எதிர்க்கட்சி தலைவர்

நிதி அமைச்சு சரியாக செயற்படவில்லை அதுவும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடு பெரும் அபாயகரமான நிலையில் உள்ளது. எரிவாயு சிலிண்டர் வெடிக்கிறது. உரப் பொதி வெடிக்கிறது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் டொலர் பலாத்காரமாக 203 ரூபாவுக்கு மாற்றப்படுகிறது. இது அநீதியானது. முதலீட்டாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் டொலரை 203 ரூபாவுக்கு மாற்றும் சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது அநீதியானது.பலாத்காரமான இந்த நடவடிக்கையை நிறுத்துங்கள்.

பசுமை விவசாயமும் இப்போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை 3.5பில்லியன் டொலராக உயர்த்தப் போவதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

அது நடக்காவிட்டால், மத்திய வங்கியும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.வெள்ளை சிவப்பு லேபிள்
உள்ள எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானது என நுவர்வோர் விவகார அமைச்சர் கூறினார். ஆனால் இப்பொழுது அதுவும் வெடிக்கிறது.

எரிவாயு பிரச்னையை தீர்க்க முடியாவிட்டால், எரிவாயு நிறுவனம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். நிதியமைச்சு  சரியாக செயல்படவில்லையென அதுவும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். என்ன நடக்கிறது இந்த நாட்டில்? இது மிக ஆபத்தானது-என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!