தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஐந்து குட்டிகளுக்கு பெயர் சூட்ட விரும்புகிறீர்களா? இதைப் படியுங்க..

#Colombo
Prathees
4 years ago
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஐந்து குட்டிகளுக்கு பெயர் சூட்ட விரும்புகிறீர்களா? இதைப் படியுங்க..

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கடந்த மூன்று மாதங்களில் பிறந்த ஐந்து கன்றுக்குட்டிகளுக்கு பெயர் சூட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷ  தெரிவித்தார்.

கழுதைக் குட்டி, நீர்யானைக் குட்டி, ஓரிக்ஸ் கன்று குட்டி மற்றும் மற்றும் இரண்டு குட்டி குரங்குகளுக்கு  இவ்வாறு பெயர் வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து குட்டிகளுக்கு பெயர் வைக்க விரும்பும் குழந்தைகள் டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன் 0706188488 என்ற எண்ணுக்கு SMS, WhatsApp அல்லது nationalzoo.gov.lk மூலம் தங்கள் பெயர்களை அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கன்றுக்குட்டிக்கு முன்மொழியப்பட்ட பெயர், குழந்தையின்பெயர், வயது, பள்ளி மற்றும் முகவரி ஆகியவற்றை  எழுதி அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், 5 கன்றுகளின் பெயர்களை அனுப்பிய 5 (தேர்ந்தெடுக்கப்பட்ட) குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4