பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிலருக்கு அவசர இடமாற்றங்கள்

#Police
Prathees
4 years ago
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிலருக்கு அவசர இடமாற்றங்கள்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் மூவர் மற்றும் உதவிப் பிரதிப் பொலிஸ்மாஅதிபர் மூவருக்கும்  அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் வி.ஜி. டி. ஏ. கருணாரத்ன, குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ. எம். யு. வி. குணரத்ன அவர்கள், சமூக காவல்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பதவிக்கு மேலதிகமாக, கடற்படை மற்றும் சுற்றுலாப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கடமைகளை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. எம். சேனாரத்ன மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளைஇ கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே. எஸ். வீரசேகர, இரத்தினபுரி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. ரணசிங்க ,  பொலிஸ் தலைமையகத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமுத்திரஜீவ கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4