500 பாடசாலை மாணவர்கள் கொரோனாவால் பாதிப்பு! வைத்தியர் ஹேமந்த ஹேரத்

#Corona Virus #Student
Mayoorikka
2 years ago
500 பாடசாலை மாணவர்கள் கொரோனாவால் பாதிப்பு! வைத்தியர் ஹேமந்த ஹேரத்

நாட்டிலுள்ள சுமார் 40 இலட்சம் பாடசாலை மாணவர்களில் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்
தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

'பாடசாலைகளில்
கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லை. நாட்டிலுள்ள சுமார் 40 இலட்சம் பாடசாலை மாண வர்களில் 500 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுச் சூழலிலிருந்து ஏராளமான மக்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் கொரோனாத்தொற்று வேகமாகப் பரவுவதில்லை. பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை' - என்றார்.

இதற்கிடையில், பாடசாலைகளில் கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ் சாட்டியுள்ளன.
மேலும், பாடசாலைகளில்கொத்தணிகள் உருவாகலாம் என்றும், மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!