400 கிலோ மரமஞ்சல் கட்டிகளுடன் மூவர் கைது

#Arrest
Prathees
4 years ago
400 கிலோ மரமஞ்சல் கட்டிகளுடன் மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி  400 கிலோகிராம் மரமஞ்சல் கட்டிகளை வைத்திருந்த  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுகம, கலடுவாவ பிரதேசத்தில் வைத்து நேற்று (10) குறித்த சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹவத்த முகாமில் உள்ள  விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, ஹொரணை முகாமில்   உள்ள விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 20, 24 மற்றும் 22 வயதுடையவர்கள் என  அதிரடிப்படையினர்  தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இங்கிரிய வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4