மனித உரிமைகள் விவகாரத்தில் சிக்கிய இலங்கை பாதுகாப்புதுறையை சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா தடை!

Reha
4 years ago
மனித உரிமைகள் விவகாரத்தில் சிக்கிய இலங்கை பாதுகாப்புதுறையை சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா தடை!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று அமெரிக்கா வெளியிட்ட  அறிவிப்பில் மனித உரிமைகள் விவகாரத்தில் சிக்கிய இலங்கை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு நபர்களிற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

11 மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் மிருசுவிலில் 8 தமிழர்களை வெட்டியும், சுட்டும் கொன்ற கொடூர குற்றவாளியான சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி ஜே. ப்ளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இராணுவம், பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பலர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4