ஜனாதிபதி மீது சந்தேகம்: பொதுஜன பெரமுனவின் எம்பி தெரிவித்த கருத்து

#Gotabaya Rajapaksa #Colombo
Prathees
2 years ago
ஜனாதிபதி மீது சந்தேகம்: பொதுஜன பெரமுனவின் எம்பி தெரிவித்த கருத்து

கலகொடஅத்தே ஞானசார தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு வருத்தமளிப்பதாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு ஜனாதிபதிக்கு உண்மையான விருப்பம் உள்ளதா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு ஜனாதிபதியின் இரண்டாவது தவணைக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெளிவாக அறிவித்தார்.

ஆனால், இதுவரை அப்படி நடக்காததால்இ அதில் உண்மையான ஆர்வம் உள்ளதா என்பது தெரியவில்லை என குறிப்பிட்டார்.

இந்த உறுதிமொழியை தற்போது நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழியாக கருதப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!