வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள ஆரம்பம்

Reha
4 years ago
வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள ஆரம்பம்

நாடு முழுவதும் செயலிழந்திருந்த வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளன.

குறித்த வசதியை பெற்றுக் கொள்வதற்கு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இணைய வசதி தடைப்பட்டு இரண்டு வாரங்களாக செயற்பட்டிருக்காத நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

முன்னர் இணையத்தளம் ஊடாக நாளாந்தம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 30,000ஆக காணப்பட்டதோடு தற்போது அந்த எண்ணிக்கை 60,000ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4