புதிய சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியாகியது!

Mayoorikka
2 years ago
புதிய சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியாகியது!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பீசிஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 72 மணிநேரத்துக்குள் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை  அல்லது விமானம் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட ரபிட் அன்டிஜென் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விமான நிலையங்களின் வருகை கவுன்டர்களில் உள்வரும் பயணிகள் கட்டாயம் ஒன்லைன் சுகாதார அறிக்கையை நிரப்புவதை உறுதி செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தகைய பயணிகள் தமது திறன்பேசியில் அல்லது காகிதப் பிரதியில் கியூஆர் குறியீடுகளை வைத்திருக்க வேண்டும். அனைத்து விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பீசிஆர் அறிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளளார்.

இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!