"கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்"- பிரபல நாடுகளை மிரட்டும் சீனா

Prasu
4 years ago
"கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்"- பிரபல நாடுகளை மிரட்டும்  சீனா

சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. 

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அதிகாரிகளை அனுப்ப மாட்டோம், வீரர்களை மட்டும் அனுப்புவோம் என அறிவித்துள்ளன.

இந்நிலையில், தங்கள் மீது வீணாக பழிபோட்டு ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக அமெரிக்காவை கண்டித்துள்ள சீனா, போட்டியைப் புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4