17 உணவுப் பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்படும்!

Prabha Praneetha
2 years ago
17 உணவுப் பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்படும்!

விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.

அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாடு செலுத்த வேண்டிய சகல வெளிநாட்டு கடனுக்கான டொலர்களையும் அடுத்த வருடத்தில் செலுத்துவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடன் செலுத்திய பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கடன் பெறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் ,அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் டொலரும், ஜூன் மாதத்தில் ஆயிரம் மில்லியன் டொலரும் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

டுபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன.

2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 5,000 பேருக்கு வரை தொழில் கிடைக்க இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத் துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது.

ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!