நகைக் கடையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை

#Police
Prathees
4 years ago
நகைக் கடையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை

நகைக்கடை ஒன்றில் நேற்று பிற்பகல் முழு முகத்தை அணிந்த ஹெல்மெட் அணிந்த ஆயுததாரிகள் இருவர் கொள்ளையிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்களே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரளை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றே இவ்வாறு பலியாகியுள்ளது.

பெருமளவான தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், ஆயுதம் ஏந்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கொள்ளைச் சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்றுள்ளதாகவும், கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4