கொழும்பில்  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ள  இரண்டு பெறுமதியான காணிகள்

#Colombo
Prathees
2 years ago
கொழும்பில்  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ள  இரண்டு பெறுமதியான காணிகள்

கொழும்பு மாவட்டத்தில் மிகவும் பெறுமதியான இரண்டு காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கைகள் வரையப்பட்டதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு காணிகளின் குத்தகை மூலம் அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதற்கு தேவையான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபை செய்துள்ளது.

இதன்படி, இந்திய முதலீட்டாளர் ஒருவர் தெமட்டகொட பிரதேசத்தில் ஐந்து ஏக்கர் காணியை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு எடுக்கவுள்ளார்.

தனியார் மருத்துவமனை திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கும் துபாய்க்கும் இடையிலான கூட்டு முயற்சியாக சம்மிட் பிளாட் வீட்டுத் திட்டத்திற்காக 10 ஏக்கர் குத்தகைக்கு விடப்படவுள்ளது.  இதன் மூலம் வருமானம் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரையப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்இ கொழும்பு கோட்டையில் 1.5 ஏக்கர் ஒரு கலப்பு திட்டத்திற்காக மலேசிய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய முதலீட்டாளர் ஒருவரால் இதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள். 

டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள 1.5 ஏக்கர் காணியை ஹோட்டல் மற்றும் வீடமைப்புத் திட்டத்திற்காக சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனமொன்று கட்டுநாயக்கா மற்றும் காலியில் பல காணிகளில் முதலீடு செய்யவுள்ள அதேவேளை மற்றொரு நிறுவனம் ஜா-எலவில் பல காணிகளில் முதலீடு செய்யவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!