அரசாங்கத்தின் நடவடிக்கையால் வெறுப்புடன் இருக்கிறோம்: தமிழ் , முஸ்லிம் அரசியல் கட்சிகளால் எடுக்கப்பட்ட தீர்மானம்

#R. Sampanthan #Rauff Hakeem
Prathees
2 years ago
அரசாங்கத்தின் நடவடிக்கையால் வெறுப்புடன் இருக்கிறோம்: தமிழ் , முஸ்லிம் அரசியல் கட்சிகளால் எடுக்கப்பட்ட தீர்மானம்

மாகாண சபைத் தேர்தல்கள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என  அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தலைமையில் கொழும்பில் கூட்டம் நடைபெற்றது

அதன் இறுதி ஒப்பந்தங்கள் எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாங்கள் கவலையுடனும் வெறுப்புடனும் இருக்கிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினால் செயலிழந்துள்ள மாகாண சபைகள் செயற்பாட்டிற்கு வருவது முக்கியமானது.

13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு என்ற எமது இலக்குகளிலிருந்து நாம் விலகவில்லை  என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!