சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அரசாங்கம் அவதானம்!

Reha
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அரசாங்கம் அவதானம்!

கடந்த நவம்பர் 30 ஆம் திகதியன்று, நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம், 1009.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இவ்வாறான பின்னணியில், இறக்குமதி செலவை ஈடுசெய்தல் மற்றும் கடன் செலுத்தல் என்பன கடும் நெருக்கடி நிலையில் உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒத்துழைப்பைப் பெறுவதா? இல்லையா? என்பது தொடர்பில், நாளைய தினம் (13) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும், கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிர் தரப்பினரும், முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என தற்போதைய அரசாங்கம் மார்தட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!