பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  225 கோடி பெறுமதியான ஹெரோயின்: 6 வெளிநாட்டவர்கள் கைது

#Arrest
Prathees
2 years ago
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  225 கோடி பெறுமதியான ஹெரோயின்: 6 வெளிநாட்டவர்கள் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கையில் உள்ள  பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்கு வழங்குவதற்காக  225கோடி ருபாவிற்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளைக் கொண்டுவந்த 6 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த  வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு தெற்கே 900 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் ஹெரோயின் ஏற்றி வந்த குறித்த  இழுவை படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஈரானியரும் நான்கு பாகிஸ்தானியரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு கிலோகிராம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு 7 பாரிய பொதிகளில் பொதி  செய்யப்பட்ட நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

டுபாய் நாட்டில் மறைந்திருந்த முன்னணி ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவரால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் ஹெரோயின் கடத்தலுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட உளவாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உளவாளிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​இந்த பாரிய ஹெரோயின் கடத்தலுக்கான மூல காரணம் தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் கையிருப்பு உள்ளிட்டவை கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹெரோயின் மற்றும் படகுடன் நாளை மறுதினம் (14ம் திகதி) இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!