பொருளாதார நெருக்கடி தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்

#Mahinda Rajapaksa
Prathees
2 years ago
பொருளாதார நெருக்கடி தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பரிந்துரைத்துள்ளனர்.

நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

அமைச்சரவைக் கூட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.

பொருளாதார நெருக்கடியே இங்கு முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

பல அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது குறித்து கருத்து தெரிவித்த அதேவேளை, ஏனையோர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

எனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதை விடுத்து நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதே சிறந்தது என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இதேவேளை எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு சுமார் 420 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் சில மாதங்களில் எரிபொருளை இறக்குமதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என நேற்று தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!