அணைக்குழுவினருக்கு கிளிநொச்சியில் கடும் எதிர்ப்பு: அமர்வும் புறக்கணிப்பு

Mayoorikka
2 years ago
அணைக்குழுவினருக்கு கிளிநொச்சியில் கடும் எதிர்ப்பு: அமர்வும் புறக்கணிப்பு

கிளிநொச்சி, டிசெம்பர் 14 மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று தெரிவித்து நேற்றைய அமர்வை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புறக்கணித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று கிளிநொச்சி வந்திருந்தது. இந்தக் குழு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடனான அமர்வு ஒன்றை நடத்தத் திட்டமிட்டது.

ஏற்கனவே, அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இந்த ஆணைக்கழுவும் எமக்கு எந்தத் தீர்வையும் வழங்காது எனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமர்வை புறக்கணித்தனர்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி கோகிலவாணி தெரிவிக்கையில், 'இன்றைய தினம் (நேற்று) மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு
வினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் பதினொரு வருடமாக ஜனாதிபதி ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழுக்கள் உள்ளிட்டவற்றை சந்தித்து முறைப்பாடுகளை செய்துள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு ஐந்து பேரினது தகவல்களை ஒப்படைத்தோம். அந்த ஐந்து பேரின் தகவல்களைக்கூட பெற்றுத்தரவில்லை.

அவர்களால் தரவும் முடியவில்லை. நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்தில் தமக்கு சாதகமாக ஜெனிவாவில் விடயங்களை சமர்ப்பிப்பதற்காக தமக்கு ஏற்றவர் களை அழைத்து பொய்யான வாக்குமூலங்களை எடுத்துள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் (நேற்று)உள்ளே வந்து எமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள். 

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாங்கள் உள்ளே வரவில்லை எனவும், வெளியே இருந்தவாறே எதிர்ப்பை
தெரிவிப்பதாகவும் கூறினோம். எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் பதிந்தும் எமக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் உள்ளே செல்லவில்லை. இந்த ஜனாதிபதி ஆணைக்
குழுவை எதிர்த்து வெளியில் நின்று போராடுகின்றோம் - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!