யாழில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்!

#Covid Vaccine #Covid 19 #Covid Variant
Mayoorikka
2 years ago
யாழில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்!

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை யாழ்.மாவட்டத்தில் நேற்று
ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகார பணிமனை பிரிவுகளிலும் இந்த செயற்திட்டம் நேற்றுக் காலை ஆரம்பமானது.

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர், சுகாதாரதுறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக மூன்றாவது கோவிட்-19 தடுப்பூசி நேற்று திங்கட்கிழமை முதல் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டு தடவைகள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாத கால இடைவெளியின் பின்னர் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபார்ம் அல்லது ஏதாவது ஒரு கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையை சமர்ப்பித்து மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பிரதி சனிக்கிழமைகளில் யாழ். மாவட்டத்தில் யாழ்.போதனாவைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகியமாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள்
வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்தியஅதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!