சிறுவர்களுக்கான மரண தண்டனை சட்டத்தில் மாற்றம்!

#children
Mayoorikka
2 years ago
சிறுவர்களுக்கான மரண தண்டனை சட்டத்தில் மாற்றம்!

சிறு வயதுக்காரர்களுக்கான மரண தண்டனை விதித்தல், குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் எதிராக மரண தண்டனையை விதித்தல் அல்லது குறித்துக் கொள்வதோ மேற்கொள்ளக் கூடாது எனவும், குறித்த தண்டனைக்குப் பதிலாக அந்நபர் ஜனாதிபதி அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் வரைக்கும் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் தண்டனையை வழங்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 18 வயதுக்குக் குறைவாக இருப்பின் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் உட்சேர்க்கப்படவில்லை. அதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தின் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!