உத்தியோகபூர்வ அறையை படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்டதாக முறைப்பாடு

#Complaint #Police
Prathees
2 years ago
உத்தியோகபூர்வ அறையை படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்டதாக முறைப்பாடு

எந்த அனுமதியும் இல்லாமல் தொலைக்காட்சி நாடக படப்பிடிப்பிற்காக   அதிகாரபூர்வ அறை மற்றும் கூட்ட மண்டபத்தை  கொடுத்ததற்கு எதிராக ஹிக்கடுவ மாநகர சபையின் பிரதித் தலைவர் மினல் செம்பக்குட்டி மற்றும் ஆளும்கட்சிஇ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் நேற்று (13ஆம் திகதி) இரவு முறைப்பாடு செய்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ நகர சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் பதிவுக்காக தனது உத்தியோகபூர்வ அறை மற்றும் கூட்ட மண்டபத்தை அதில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் வழங்கியதாக  துணைத் தலைவர் மினல் செம்பக்குட்டி அளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

“இந்த தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை.

ஆனால் எனது உத்தியோகபூர்வ அறையும் ஒன்று கூடல் அறையும் மாநகர சபை மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரின் அனுமதியுடன் நாடகத்தின் படப்பிடிப்பிற்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் சபையின் மூத்த அதிகாரி ஒருவரின் வாய்மொழி அனுமதியுடன் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கலைஞர்கள் மீது நான் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. இந்த சட்டவிரோத செயலை அனுமதித்த அதிகாரிக்கு தான் எதிரானவன் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!