பாரியளவில் நிதிமோசடி: முன்னாள் பணிப்பாளர் சிஐடியால் கைது

#Arrest
Prathees
2 years ago
பாரியளவில் நிதிமோசடி: முன்னாள் பணிப்பாளர் சிஐடியால் கைது

கொழும்பு மாவட்டத்தில், பாப்பிலியானவில் அமைந்துள்ள வாகன சேவை மற்றும் பராமரிப்பு நிறுவனத்தின் இரண்டு கிளைகளில்   கணினிகளில் போலி கணக்குகளை பராமரித்து,  அந்த இரண்டு கிளைகளுக்கும் சொந்தமான 130 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த வழக்கு தொடர்பில் அந்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டோ மிராஜ் குழும நிறுவனங்களின் முன்னாள் இயக்குனர் மற்றும் அவரது மனைவியால் சுமார் 300 – 400 மில்லியன் ரூபா வரையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வணிக உயர் நீதிமன்றத்திலும்இ சிஐடியிலும் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

கங்கொடவில நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கமான B3126/20 இன் கீழ் இந்த வழக்கு சிஐடியால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!